இலங்கை

பாணின் எடை தொடர்பில் வௌியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடையைக் குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒரு இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 450 கிராமாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாறுபாடு 13.5 கிராமிற்கு குறையாமல் இருக்க வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரை இறாத்தல் பாணியின் பரிந்துரைக்கப்பட்ட எடை 225 கிராமாக இருக்க வேண்டும் எனவும் அதன் மாறுபாடு 09 கிராமுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விற்பனைக்கு காட்சிப்படுத்தப்படும் பாணியின் எடை தௌிவாக காணக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை வௌியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!