இலங்கையில் எரிபொருள் விலை உயர்வு : தனியார் பேருந்து சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!
தொடர் டீசல் விலை உயர்வால் பஸ் கட்டணத்தை உடனடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனியார் பஸ் சங்கங்கள் கூறுகின்றன.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “முன்னதாக ஒரு லிட்டர் டீசல் விலை 29 ரூபாய் உயர்த்தப்பட்டது. அது நிற்காமல் நேற்று மீண்டும் 5 ரூபாய் டீசல் விலை உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக பஸ் கட்டணம் அதிகரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, “இரண்டு வாரங்களுக்குள் கண்டிப்பாக பஸ் கட்டணத்தை உயர்த்துவோம். இந்த நேரத்தில் குறைந்தபட்ச பஸ் கட்டணம் 35 ரூபாயாக இருக்கும். கட்டாயப்படுத்தி செய்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தற்போதைக்கு எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் லலித் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
VAT தாக்கம் மற்றும் எரிபொருள் கட்டண அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.ருவன் பிரசாத் தெரிவித்தார்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் திரு.லலித் தர்மசேகர தெரிவித்தார்.