இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் மீது தொடுக்கப்பட்ட தோஷகனா வழக்கு விசாரணையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அரசுக்கு சொந்தமான பரிசு பொருட்களை விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, நீதிமன்றம் இருவருக்கும் 1.5 பில்லியன் பாகிஸ்தான் ரூபா அபராதமும் விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு நாட்களில் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட இரண்டாவது சிறைத் தண்டனை இதுவாகும்.
நேற்று இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரச இரகசியங்களை வெளியிட்டமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் காரணங்களுக்காக கூறப்பட்டவை என்று இம்ரான் கான் கூறுகிறார்.
பாகிஸ்தானில் அடுத்த வாரம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில் இம்ரான் கானுக்கு எதிராக சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் தற்போது பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.