தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு – கிழக்கு ஆளுநர் அறிவிப்பு!

இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஓ லையில் நேற்று (23) ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் 40 வருடங்களுக்குமேல் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கு சர்வதேச ரீதியாக பயணிக்கக்கூடிய கடவுச் சீட்டு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் தாங்கள் விரும்பிய நாடுகளுக்கு சென்று தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள முடியும் மேலும் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)