இலங்கையில் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் அபாயம்
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் மரக்கறி கொள்வனவுகள் மற்றும் தற்போதைய நிலவரங்களை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மே மாதத்தின் பின்னர் மரக்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் என நுவரெலியா பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஊடகங்களுக்கு வழங்கிய விசேட அறிவிப்பிலேயே அருண சாந்தஹெட்டியாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு, தற்போது நுவரெலியா பொருளாதார நிலையத்தில் மரக்கறிகளின் விலையை பொருளாதார மத்திய நிலையம் தீர்மானிக்காது, விவசாயிகள் கொடுக்கும் விலைக்கே பொருளாதார நிலையத்தின் வர்த்தகர்களால் மரக்கறிகளின் விலைகள் எடுக்கப்படுவதாக அருணாசாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.