இஸ்ரேல் – ஹமாஸ் போர் : ஐ.சி.சி நீதிமன்றத்தை நாடிய முக்கிய நாடுகள்!
காசாவில் பொதுமக்களுக்கு எதிரான சாத்தியமான குற்றங்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யுமாறு மெக்சிகோ மற்றும் சிலி ஆகிய நாடுகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கேட்டுள்ளன.
இது தொடர்பில் மெக்சிகோவின் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் அதிகரித்து வரும் வன்முறைகள், குறிப்பாக பொதுமக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் காரணமாக மேற்படி கோரிக்கையை முன்வைப்பதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இரு தரப்பும் சர்வதேச சட்டத்தை மீறியுள்ளதாக பரவலாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையின் போது 24,400 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இறந்ததாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது, மேலும் காஸாவில் சிக்கியுள்ள 2.3 மில்லியன் மக்களில் கால் பகுதியினர் பட்டினியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.