விற்பனையில் முதலிடத்தைப் பிடித்த iPhone!
முதன்முறையாக உலகில் மிக அதிகமாக விற்பனையாகும் கைத்தொலைபேசியாக Apple நிறுவனத்தின் iPhone உருவெடுத்துள்ளது.
கடந்த ஆண்டு 234.6 மில்லியன் iPhone கைத்தொலைபேசிகள் விற்கப்பட்டதாக அனைத்துலகத் தரவு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
12 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த Samsung நிறுவனத்தை அது பின்னுக்குத் தள்ளியது.
Samsung கடந்த ஆண்டு 226.6 மில்லியன் கைத்தொலைபேசிகளை விற்றது. Samsungஐப் போன்று Huawei, கூகள், Xiaomi போன்ற பல நிறுவனங்கள் Android செயல்முறையைப் பயன்படுத்துகின்றன.
சீனாவில் Huawei கைத்தொலைபேசிகள் அதிகம் விற்கப்படுகின்றன. இந்நிலையில் Samsung நிறுவனத்துக்கு அதிகப் போட்டி இருப்பதாக நிபுணர்கள் கூறினர்.
(Visited 12 times, 1 visits today)