சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தல் – மருத்துவமனைகளில் அதிகரிக்கும் நோயாளிகள்
சிங்கப்பூரில் கொரோனா தொற்றால் அன்றாடம் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரின் சராசரி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் 350ஆக இருந்த அந்த எண்ணிக்கை, இந்த வாரம் 560ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு தகவல்களை வெளியிட்டது.
மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோரில், பெரும்பாலோர் 60 வயதை எட்டியவர்கள்.
கடந்த 10ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதி வரை, சுமார் 1000 பேர் COVID-19 தொற்றுக்காக மருந்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் 32 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் வாராந்திர அடிப்படையில் 4 சதவீதம் அதிகரித்து சுமார் 58,000 ஆனது.
(Visited 6 times, 1 visits today)