இலங்கையில் 80 வீதமான இறப்புகள் தொற்றா நோய்களால் ஏற்படுகிறது!
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இலங்கையில் வருடாந்த இறப்புகளில் 80% தொற்றாத நோய்கள் மற்றும் அவற்றின் சிக்கல்களால் ஏற்படுகின்றன.
சுகாதாரப் பதிவுகளின்படி, நாட்டின் சனத்தொகையில் 35 வயதுக்குட்பட்டவர்களில் 15% பேர் நீரிழிவு நோயினாலும் 35% பேர் உயர் இரத்த அழுத்தத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
உடற்பயிற்சியின்மையே அந்த நிலைக்கு முக்கியக் காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள உடல் நலப் பிரிவை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால திறந்துவைத்ததுடன், எதிர்காலத்தில் அரச வைத்தியசாலைகளிலும் இவ்வாறான உடல் நலப் பிரிவுகளை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)