ஜெர்மனியில் உதவி பணத்தில் ஏற்படவுள்ள அதிகரிப்பு – பொது மக்களுக்கு வெளியான அறிவிப்பு
ஜெர்மனியில் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து சமூக உதவி பணத்தில் 12 சதவீதமான அதிகரிப்பு ஏற்படுத்தப்படும் என்று அரச தரப்பு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டும் இவ்வாறே சமூக உதவி பணத்தில் உயர்ச்சி ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேவேளையில் ஜெர்மனியின் தொழில் மந்திரியான வுபேட்டஸ் ஹயில் அவர்கள் 2025 ஆம் ஆண்டு இவ்வாறு சமூக உதவி பணத்தில் உயர்வு ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லை என்று கூறி இருக்கின்றார்.
இவ்வாறு 2024 ஆம் ஆண்டு சமூக உதவி பணத்தில் உயர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற முடிவு எடுத்தப்பொழுது ஜெர்மனியில் பண வீக்கமானது 9 சதவீதமாக காணப்பட்டதாகவும்,
தற்பொழுது ஜெர்மனியின் பண வீக்கம் 3 சதவீதத்தை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த காரணத்தை அடிப்படையாக கொண்டு 2025 ஆம் ஆண்டு இவ்வாறு சமூக உதவி பணத்தில் உயர்ச்சி ஏற்படுத்த கூடிய கட்டாயம் ஏற்பட மாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளையில் 2024 ஆம் ஆண்டில் சமூக உதவி பணத்தில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.