இலங்கையில் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம்!
இலங்கையில் மீண்டும் மின்சாரம் தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியல் அதிகாரசபையின் இணைச் செயலாளர் நந்தன உதயகுமார தெரிவித்தார்.
வயரிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறுதான் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு காரணம் எனவும் 2022 ஆம் ஆண்டில், பியகம மற்றும் கொத்மலையின் வயரிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தீவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்்
அதேபோல் கடந்த சனிக்கிழமை (09.12) வயரிங் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் தடை ஏற்பட்டதாக கூறிய அவர், இதில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இல்லை என்றால் அது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனவும் உதயகுமார மேலும் தெரிவித்தார்.
(Visited 8 times, 1 visits today)