தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்ட மாற்றம் : இலங்கைக்கும் பாதிப்பு!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக இலங்கையின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
கொந்தளிப்பு தன்மையை பொறுத்து மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
(Visited 14 times, 1 visits today)