இலங்கையில் சந்தை வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என அறிவிப்பு!
இலங்கையில் எதிர்காலத்தில் சந்தை வட்டி வீதங்கள் மேலும் குறையும் என நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகின்றார்.
வர்த்தகங்கள், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மற்றும் ஏனைய வர்த்தகங்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் எனவும் மத்திய வங்கி இதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பத்து வங்கிகள் இன்னமும் மத்திய வங்கி எதிர்பார்த்த அளவை எட்டவில்லை என்றும், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வட்டி விகிதத்தை அந்த நிலைக்கு கொண்டு வருமாறு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய வங்கியின் தலைவர்களின் கூற்றுப்படி, அந்த நிலையை அடையாவிட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 5 times, 1 visits today)