ஆபாச வார்த்தையால் அதிகாரிக்கு திமுக கவுன்சிலர் அர்ச்சனை
சென்னை தாம்பரம் அடுத்த வேங்கைவாசல் சாலையில் மழைக் காலங்களில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கும், அதனை தவிர்க்கும் விதமாக நெடுஞ்சாலை துறை சார்பில் வடிகால்பணியை நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பணியை மேற்கொள்ள விடாமல் தனியார் கட்டுமான நிறுவனம்(விஜிகே), ஒன்று மணல், கற்களை சாலையோரம் கொட்டி வைத்து பணி செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர்.
இதனால் வேங்கைவாசல் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் மாணிக்கம்(ஆர்.ஐ) அவர்கள், சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மணல், கற்களை வாரி அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது விஜிகே கட்டுமான நிறுவனம் தாம்பரம் மாநகராட்சி 33 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் என்பவருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்து வேலையை நிறுத்துடா,
என்னடா பண்ணுவ வாயெல்லாம் ஒடைச்சி விடுவேன் என ஏக வசனத்தில் ஆபாச அர்ச்சனை செய்தார். அதிகாரியோ ஆளும் கட்சி கவுன்சிலர் என்பதால் என்ன செய்வது என தெரியாமல் மிரண்டு போய்,
பேச கொஞ்சம் நேரம் ஆகாது என கூறி விட்டு அத்தனை ஆபாச பேச்சையும் கேட்டுக் கொண்டு அமைதியாய் இருந்தார்.பின்னர் அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்தனர்.
அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுக்கும் திமுக கவுன்சிலர் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டு திட்டியதன் நோக்கம் என்ன? எதற்காக சம்மந்தமில்லாமல் வந்து தலையிட்டார் என அவரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் என்னை திட்டிய்தால் நானும் திட்டினேன் என கூறினார்.
நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளரிடம் கேட்ட போது இதையெல்லாம் விட்டு விடுங்கள் என கூறி இணைப்பை துண்டித்து விட்டார். ஆளும் கட்சி கவுன்சிலரின் அராஜக நடவடிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் கட்டுப்படுத்த வேண்டும் என புலம்புகின்றனர் அரசு அதிகாரிகள்.