ஐரோப்பா

இத்தாலி வழங்கும் வாய்ப்பு – 26,000 யூரோக்களுடன் வாழ சந்தர்ப்பம்

இத்தாலியின் கலாப்ரியாவில் தங்குவதற்கு, அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு 26,000 யூரோக்கள் வரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர அழகு மற்றும் மலை நிலப்பரப்புகளுக்கு புகழ்பெற்ற அழகிய தெற்குப் பகுதியான கலாப்ரியாவில் பல ஆண்டுகளாக மக்கள்தொகை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு மக்கள் தொகையைப் பெருக்குவதற்காக ஒரு திட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டுவந்துள்ளது.

ஆனால் கலாப்ரியாவிற்கு வர ஆர்வமுள்ளவர்கள் நிதி ஊக்குவிப்பு மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பங்களிக்க வேண்டும். அங்கு இருக்கக்கூடிய உள்ளூர்வாசிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய தொழிலைத் தொடங்கலாம் அல்லது அங்கே இருக்கக்கூடிய அதிக பணியாளர்கள் தேவைப்படும் உணவகங்கள், கடைககளில் வேலைக்குச் செல்ல வேண்டும்.

ஏற்கனவே உங்கள் பகுதியில் வேலையில் இருந்தாலும் கூட அந்த வேலையை இங்கே வந்து விரிவு படுத்திக் கொள்ளலாம். இதற்கு மூன்று வருட காலத்திற்கு 26,000 யூரோ வரை வழங்கப்படும். இந்த பணம் மொத்தமாகவோ அல்லது மாதாந்திரக் கட்டணமாகவோ வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு தகுதி பெற 40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதோடு, விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 90 நாட்களுக்குள் கலாப்ரியாவுக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!