துருக்கியில் இருந்து இயக்கப்படும் நேரடி விமான சேவை : இன்று முதல் ஆரம்பம்!
துருக்கி விமான சேவையின் முதல் விமானம், இன்று (30.10) நேரடியாக கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தது.
அதன்படி, துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று அதிகாலை 05.40 மணியளவில் TK-730 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானத்தில் இருந்து 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
துருக்கியில் இருந்து இயக்கப்படும் குறித்த விமானமானது திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 05.40 மணிக்கு புறப்பட்டு மீண்டும் காலை 07.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துருக்கிக்கு புறப்படும்.
அடுத்த வருடம் முதல் வாரத்தில் 7 நாட்களுக்கு ஒருமுறை துருக்கி விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 வருடங்களாக துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமானங்களை இயக்கி வந்ததுடன், நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் துருக்கியிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என ஏர்போர்ட்ஸ் அன்ட் ஏர்லைன்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.