யாழ்ப்பாணம் – தமிழக படகு சேவை மீள ஆரம்பம்
வடகிழக்கு பருவமழை காலநிலை காரணமாக இந்திய-இலங்கை பயணிகள் படகு சேவையின் முதல் கட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலநிலை தணிந்ததன் பின்னர் பயணிகள் போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீள ஆரம்பிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் காங்கசன்துறை துறைமுகத்தின் பொறுப்பதிகாரி சமன் பெரேரா தெரிவித்தார்.
“செரியபாணி” என்று பெயரிடப்பட்ட இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 150 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
41 ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 14 அன்று இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கசன்துறை துறைமுகத்திற்கு பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகள் தொடங்கியது.
இதேவேளை, பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் இரு நாடுகளிலும் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என சமன் பெரேரா தெரிவித்தார்.
இது வெற்றியடையும் பட்சத்தில் வடக்கில் சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு அதிக இடவசதி கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.