அமெரிக்காவை அச்சுறுத்தும் வெள்ளம் – நியூயோர்க்கில் அவசர நிலை பிரகடனம்
அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இதனால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
நகரின் ரயில் நிலையங்கள், தெருக்கள், நெடுஞ்சாலைகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. LaGuardia விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.
சில இடங்களில் ஒரே இரவில் 12 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இன்னும் 17 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று நியூயார்க் ஆளுநர் Kathy Hochul குறிப்பிட்டுள்ளார்.
எவரும் உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை. நியூ ஜெர்சியின் Hoboken நகரிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்கும்படி நியூயார்க் மேயர் Eric Adams வலியுறுத்தினார்.
(Visited 8 times, 1 visits today)