வரி இன்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி?

முதலீட்டுச் சபையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அச்சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் வாகனங்களை அசெம்பிள் செய்ய முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்கு அனுமதி உள்ளது. உதிரிபாகங்களை கொண்டு வரலாம். வரி கிடையாது என அவர் கூறியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)