இலங்கை மத்திய வங்கியில் வேலைவாய்ப்பு – இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்

இலங்கை மத்திய வங்கி முகாமைத்துவ பயிற்சியாளர்களுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறித்த வெற்றிடத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர் ஒரு போட்டிப் பரீட்சையை எதிர்கொள்வதுடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேர்முகத்தேர்வுகளை எதிர்நோக்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பணிக்கான பயிற்சி காலம் ஒரு வருடமாகும். மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வரிக்கு உட்பட்ட நிலையான கொடுப்பனவாக மாதம் ஒன்றுக்கு ரூ. 125,000 பயிற்சிக் காலத்தில் வழங்கப்படும் என்று மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 22 times, 1 visits today)