நிபா வைரஸ் வான்வழியாக நாட்டிற்கு வரும் அபாயம் உள்ளது
நிபா வைரஸால் இலங்கைக்கு இதுவரை எந்த அச்சுறுத்தலும் இல்லையென்றாலும், அதில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் உலக சுகாதார ஸ்தாபனத்துடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், நிபா வைரஸ் நாட்டிற்குள் வராமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகம் மற்றும் வைராலஜி தொடர்பான நிபுணர்கள் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டில் வைரஸ் தொற்றுகள் பதிவாகினால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடி வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வான்வழியாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் அபாயம் உள்ளதால் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக புனித யாத்திரைக்காக வெளிநாடு செல்பவர்களால் இந்நோய் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.