யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிகெட் மைதானம் அமைக்கும் முயற்சியில் சந்தோஷ் நாராயணன்!

‘யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை தந்த அவர், தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன்.
இந்த இசை நிகழ்வு முற்றிலும் இலவசமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினையும் நிகழ்வாக இருக்கும். அடுத்து வரும் நாட்களின் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்ந்து வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 10 times, 1 visits today)