ஐரோப்பா

பிரான்ஸில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஐபோன்-15 விற்பனை பாதிப்பு!

ஐபோன்-15 சீரிஸ் போன்கள் நேற்று விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், பிரான்ஸில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் விற்பனை பாதிக்கப்பட்டது.

அவர்கள் 7 சதவீத ஊதிய உயர்வு கோரிவந்த நிலையில், நான்கரை சதவீதத்திற்கு மேல் வழங்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்ததால் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

மழையையும் பொருட்படுத்தாமல் ஐபோன் 15 வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதிக கதிர்வீச்சை வெளியிடுவதாக குற்றம் சாட்டி ஐபோன் 12 சீரீஸ் போன்களை விற்க பிரான்ஸ் அரசு தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ஐபோன் 15 விற்பனையும் பாதிக்கப்பட்டு ஆப்பிள் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!