சிங்கப்பூரில் இடம்பெற்ற கோர விபத்து – மூவர் படுகாயம்

சிங்கப்பூர் ஓபிர் சாலையில் லாரி மீது மரம் விழுந்து மேற்கூரை நொறுங்கியதில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் மூவரின் நிலை என்ன என்பது தற்போது வெளியாகவில்லை.
ரோச்சர் கால்வாய் சாலைக்கு அருகிலுள்ள ஓபிர் சாலையில் வியாழன் மாலை 6.35 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.
அருகிலிருந்த கிரேன் உதவியுடன், லாரியில் இருந்து மரம் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது..
அதே நேரத்தில் ஓட்டுநர் இருக்கையில் ஒருவர் சிக்கியதாகவும், அவரை ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி காப்பாற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இருக்கையில் இருந்து மீட்கப்பட்ட நபர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இருவர் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.