பிரித்தானியாவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்த அறிவிப்பு!
பிரித்தானியாவில் புதிய கோவிட் மாறுபாடு BA.2.86 வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தடுப்பூசி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவும் என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், இந்த வாரம் முதல் கொவிட் மற்றும் ஃப்ளு தடுப்பூசிகளை பெறுவார்கள் தேசிய சுகாதார சேவை கூறியது.
“தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற கோவிட்-19 வகைகளுடன் ஒப்பிடும்போது, BA.2.86 வைரஸ் மரபணுவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருந்தாலும், பரவுதல், தீவிரம் அல்லது நோயெதிர்ப்புத் தப்பித்தல் ஆகியவற்றில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)