பதவியில் இருந்து தயாசிறி நீக்கம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான கடிதம் நேற்று இரவு தமக்கு கிடைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளார்.
கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வினவிய போது சரத் ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
(Visited 5 times, 1 visits today)