ரஷ்யா-உக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடும் அபாயம்
ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போரில் வடகொரியா ஈடுபடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த மாதம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (Kim Jong Un) ரஷ்யா செல்லத் திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் உத்தேச ஆயுத ஒப்பந்தம் பற்றிக் கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் மாநாட்டில் தலைவர்கள் இருவரும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புட்டினுக்கு வெடிகுண்டுகளும் கவச வாகனங்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளும் தேவைப்படுகின்றன.
அதற்குக் கைம்மாறாக மேம்பட்ட செயற்கைத் துணைக்கோளத் தொழில்நுட்பம், அணுச்சக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், உணவுப் பொருள்கள் ஆகியவற்றை கிம் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இரு நாட்டுத் தலைவர்களும் மும்முரமாய் ஈடுபட்டிருப்பதாகச் சென்ற வாரம் வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.
ஆயுத ஒப்பந்தம் குறித்து இருவரும் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதாக அது எச்சரித்திருந்தது.