காலியில் அவசரநிலை பிரகடனம்!

காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மத்தியில் பரவும் தொற்று நோய் காரணமாக சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி சிறைச்சாலைக்குள் அனுமதிப்பதற்கும் கைதிகளை வெளியே அழைத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல் மற்றும் தோல் தொற்று காரணமாக ஒன்பது கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நோயினால் இரண்டு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், அந்த மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(Visited 15 times, 1 visits today)