தென்னாப்பிரிக்கா செல்லும் ஜி ஜின்பிங்!

சீனத் தலைவர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்லவுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க குடியரசுத் தலைவர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீ ஜின்பின் செல்லவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர், 2023 ஆம் ஆண்டு சி ஜின்பிங் மேற்கொள்ளும் இரண்டாவது சர்வதேச பயணம் இதுவாகும்.
பிரேசில், சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட தூதர்கள் ஆகஸ்ட் 22-24 திகதிகளில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)