அமெரிக்காவில் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
அமெரிக்காவின் – பிலடெல்பியாவில் மக்கள் விசித்திரமாக நடந்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதற்கமைய, குறித்த மக்கள் வீதியில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
xylazine அல்லது ஜாம்பி மருந்து எனப்படும் புதிய போதை மருந்து அமெரிக்கா முழுவதும் பரவி மக்களை வித்தியாசமாக நடந்துகொள்ள தூண்டுவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பிலடெல்பியா நகரத்தில் இந்த சைலாசினால் பலர் பாதிக்கப்பட்டு ஜாம்பி போன்று வித்தியாசமாக நடந்து கொள்கின்றனர்.
இந்த சைலாசின் பவுடர் இதயத் துடிப்பைக் குறைத்து, உங்கள் சுவாச மண்டலத்தை மெதுவாக்குகிறது மற்றும் நரம்பு மண்டலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறக்க நேரிடலாம். இதனை உட்கொண்ட பிறகு நிமிர்ந்து நிற்கவோ அல்லது சரியாக நடக்கவோ முடியாது.
இந்த போதைப்பொருள் உடல் சருமங்களை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது. இது தோலில் சீழ் வடியும் புண்களை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டால் உறுப்பு துண்டிக்கப்படும் அளவுக்கு சென்றுவிடும் என்றும் இதற்கு மாற்றுமருந்தே கிடையாது எனவும் அறிவியல் ஆராய்ச்சியாளராகள் கூறுகிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே, பிலடெல்பியாவில் மக்கள் விசித்திரமாக வீதிகளில் நடந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, பிலடெல்பியா நகரத்தில் சைலாசினால் அதிகரித்து வரும் அபாயம் குறித்து வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
This is Philadelphia, USA.
While the United States Government invest trillions of dollars into war, the streets of America look like this.
America is failing⬇️ pic.twitter.com/YMA1K49PUT
— Rev Laskaris (@REVMAXXING) July 17, 2023