மூதூர் – பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 37வது நினைவஞ்சலி நிகழ்வு
திருகோணமலை- மூதூர் – பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 37வது நினைவஞ்சலி நிகழ்வு மணற்சேனை சித்தி விநாயகர் ஆலயத்தில் இன்று (16) காலை மிகவும் உணர்வுபூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், மூதூர் பிரதேசசபை முன்னாள் உப தவிசாளர் சி.துரைநாயகம், முன்னாள் கிராம உத்தியோகத்தர் தேவகடாட்சம் உட்பட பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 40 பேருக்கு மேற்பட்டவர்கள் ஆயுத தாரிகளினால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள் இவர்களின் ஆத்மசாந்தி வேண்டி அப்பகுதி மக்களால் இன்று நினைவுநாள் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. குறித்த படுகொலைச் சம்பவத்தில் 2 பெண்கள் உட்பட 44 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
1986ம் ஆண்டு யூலை மாதம் 16ம் திகதி அதிகாலை 3.00 மணியளவில் 300க்கும் மேற்பட்ட ஆயுததாரிகளால் அகதி முகாமும், அயல் கிராமங்களும் சுற்றிவளைக்கப்பட்டு இப்பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களது 17 பேரின் சடலங்கள் கட்டைபறிச்சான் புPளு இராணுவ முகாமில் வைத்து பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.