இலங்கையில் அதிரடி சோதனைக்கு தயாராகும் அதிகாரிகள்!
இலங்கையில் பொருட்களின் விலை குறைப்பின் பயனை மக்களுக்கு வழங்காத வர்த்தக நிலையங்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அதற்கான சோதனை நடவடிக்கைகள் தொடர்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அந்த சபையின் சுற்றிவளைப்பு மற்றும் சோதனை பிரிவின் பணிப்பாளர் ரசல் சொய்சா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில் அதன் பயன் நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும்.
எனினும், பிரதேச ரீதியாக மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை,
இதற்கு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையே பிரதான காரணமாகும்.
விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமையால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.