ஜேர்மனியில் இரு மாணவிகளை கத்தியால் குத்திய புகலிடக்கோரிக்கையாளர் !
ஜேர்மன் நகரம் ஒன்றில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவிகள் இருவரைத் தாக்கிய புகலிடக்கோரிக்கையாளர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் நகரமான Illerkirchbergஇல், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவிகளை மர்ம நபர் ஒருவர் கத்தியால் சரமாரியாகக் குத்தினார்.
கத்தியால் குத்தப்பட்ட 14 வயதுடைய மாணவி உயிரிழந்த நிலையில், அந்த 13 வயதுள்ள மாணவி காயங்களுடன் தப்பியோடினார். 27 வயதான அந்த நபர், எரித்ரியா நாட்டைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் என பின்னர் தெரியவந்தது.
இந்நிலையில், பவேரியாவிலுள்ள Ulm நகரிலுள்ள நீதிமன்றம் ஒன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
அவர் மீது, கொலை மற்றும் கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக, ஜேர்மனியில் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் விடுவிக்கப்படுவார்கள். ஆனால், இந்த நபரின் குற்றச்செயலின் ஆழம் கருதி அவருக்கு இந்த சலுகை கிடைக்காது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.