சிங்கப்பூரில் 26 முறை வயோதிப பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற பணிப்பெண்
சிங்கப்பூரில் 70 வயதுத் தாயாரை 26 முறை கத்தியால் குத்திக்கொன்ற பணிப்பெண் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண்ணுக்கு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரைச் சேர்ந்த Zin Mar Nwe என்ற பணிப்பெண் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த செயலை செய்துள்ளார்.
முதலாளியின் அம்மா தன்னை முகவரிடமே திருப்பி அனுப்பப்போவதாக மிரட்டியதால் Zin அவரைக் கத்தியால் குத்தினார்.
அதன்பிறகு கத்தியைக் கழுவிவிட்டு, தம்முடைய பொருள்களை எடுத்துக்கொண்டு, உடையை மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் Zin அவரது முகவரின் நிறுவனத்தில் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த 2018 ஜனவரி மாதம்தான் Zin சிங்கப்பூருக்கு வந்தார். அப்போது அவருக்கு 23 வயது என்று கடவுசீட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட உடல் மருத்துவப் பரிசோதனையில் ஸின் சிங்கப்பூருக்கு வந்தபோது 17 வயது என்று தெரியவந்தது. விசாரணையின்போது Zin தனக்கு 23 வயது என முகவர் கூற சொன்னதாக கூறியுள்ளார்.
வயது காரணமாக ஸின்னுக்கு ஆயுட்தண்டனை மட்டுமே விதிக்கமுடியும் என்று நீதிபதி தெரிவித்தார்.