(UPDATE) ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08ஆக உயர்வு!

உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள Kramatorsk பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிரித்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், மேலும் 56 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைனின் அவசர சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.
ஏவுகணைகள் கிராமடோர்ஸ்க் நகரின் மையத்தில் உள்ள நெரிசலான உணவகத்தைத் தாக்கியதுடன், கட்டட இடிபாடுகளில் இருந்து 3 பேர் மீட்கப்பட்டதாக அவசரகால சேவைகள் மேலும் தெரிவித்தன.
மேலும் காணமல்போனவர்களை தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)