இலங்கை நாடாளுமனத்தின் இறுதி அமர்வு எப்போது? : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஒப்புதலை பெறுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
இதன்படி குறித்த கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் (27.06) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
“கட்சித் தலைவர்கள் ஜூன் 27 அன்று கூடுவார்கள், சிறப்பு வார இறுதி அமர்வு நடத்துவது குறித்த இறுதி முடிவு அன்று முடிவு செய்யப்படும்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வார இறுதி அமர்வுகளை நடத்தும் திட்டம் குறித்து கேள்வி எழுப்பியதுடன், கட்சித் தலைவர்களால் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அடுத்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவிற்கான தனது விஜயத்தின் போது இலங்கை கடன் மறுசீரமைப்பை இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்யும் என தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.