அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கி … 4 நாட்களாக தொடரும் தேடுதல் பணி
டைடானிக் கப்பலை பார்வையிடுவதற்காக 5 கோடீஸ்வர்ர்களை அயைத்து சென்று மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் தீர்ந்து வரும் நிலையில் தேடுதல் பசிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஞாயிற்றுகிழமை அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடற்படையினர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் 4 நாடகளாக தேடிவருகின்றனர்.
நீர்மூழ்கி கப்பல்கள் செல்ல முடியாத இடத்தில் கேமரா பொருத்தப்பட்ட ரோபோக்கள் மூலம் தேடுதல் பணிகள் நடைபெறுகின்றன.
கடலுக்கடியில் ஏற்படும் சத்தங்களை கண்டுபிடிப்பதற்காக ஆங்காங்கே போடப்பட்ட மிதவைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கடலுக்கடியில் சத்தங்கள் பதிவானதால் மீட்பு குழுவினர் மேலும் உத்வேகத்துடன் நீர்மூழ்கியை தேடிவருகின்றனர்.
(Visited 4 times, 1 visits today)