ஐரோப்பா

பணம் கொடுத்து இந்திய குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்யக் கூறிய இங்கிலாந்து ஆசிரியர்!

இளவரசர் வில்லியமின் மகனுக்கு கல்விக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் மீது, சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ய இந்திய இளைஞர்களுக்கு  பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இங்கிலாந்தை சேர்ந்த மேத்யூ ஸ்மித் என்ற ஆசிரியர்,  இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு பணம் கொடுத்து குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் படி கேட்டுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மேத்யூ கடந்த நவம்பர் மாதம் 2022 இல் தேசிய குற்றவியல் ஏஜன்சியால் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினியில், 120,000 க்கும் மேற்பட்ட குழந்தைகளின்  படங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்த குற்றச்சாட்டுக்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். அதேநேரம் இந்தியாவில் உள்ள ஒருவருக்கு £65,398  பவுண்டுகளை கொடுத்து குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் படி கேட்டுக்கொண்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேத்யூ தனது ஆரம்பக் குற்றங்களை ஒப்புக்கொண்டாலும், அவர் மீது 17 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!