தண்ணீரிலிருந்து முழுமையாக வெளியை வந்த 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம்!
மெக்சிகோவில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயம் ஒன்று திடீரென பூமியில் இருந்து வெளி வந்துள்ளது.
தண்ணீரில் மூழ்கிய இந்த தேவாலயம் தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளது. உண்மையில் இதற்கான காரணம் இப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி தான் என கூறப்படுகிறது.
இந்த தேவாலயம் சாண்டியாகோ கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக குறைந்த நீர்மட்டம் உள்ள காலங்களில் ஓரளவு தெரியும்.இருப்பினும், வழக்கத்தை விட மிக அதிக வெப்பநிலை நிலவுவதாலும், மழை இல்லாததாலும், அணை வறண்டு போய் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
1966 ஆம் ஆண்டு அருகில் உள்ள கிரிஜால்வா ஆற்றின் கிளை நதியில் அணை கட்டப்பட்டதில் இருந்து தேவாலய கட்டிடம் முழுவதுமாக நீரில் மூழ்கியது.பல ஆண்டுகளாக, சுற்றுலா பயணிகள் படகு மூலம் தேவாலயத்திற்கு வருகை தந்தனர்.
அணைக்குள் இருக்கும் சர்ச்சின் கட்டமைப்பு முழுமையாக வெளியே வந்துள்ள நிலையில் மக்கள் இப்போது கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் தேவாலயத்தின் வாசலுக்குக் கொண்டு செல்கிறார்கள்.அந்த அளவிற்கு நீர் வற்றியுள்ளது. கடும் வெப்பம் காரணமாக கடந்த வாரத்தில் மெக்சிகோ முழுவதும் எட்டு பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.