இலங்கை

இலங்கையில் அதிகரித்துள்ள எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் மற்றும் 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன், ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது, இந்த வருட முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 13 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.மேலும், எண்ணிக்கையில் எச்ஐவி, எயிட்ஸ் தொற்றுக்கள் 4,556 இலிருந்து 5,176 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 165 புதிய நோயாளர்கள் மற்றும் 15 இறப்புகள் பதிவாகியுள்ளன. எனினும் 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1,520 எயிட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!