சீனாவில் பிரபலமாகி வரும் துன்பத்தின் மதிய உணவு!
சீனாவில் மேற்கத்தேய மக்களின் உணவு கலாச்சார முறை தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் முக்கிய விடயமாக மாறியுள்ளது. மேற்கத்தையே மக்களின் உணவை உண்ணும் மக்கள் தங்களுடைய தனிப்பட்ட அனுபவங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் ஒரு சில மக்கள் இந்த உணவு பழக்கத்தை துன்பத்தின் மதிய உணவு என்று அழைக்கிறார்கள். காரணம் அந்த உணவு சுவையில்லாமல் இருக்கிறது என்ற கருத்தை மக்கள் முன்வைக்கிறார்கள்.
அதாவது சீனாவில் தற்போது என்ன டிரெண்டிங்கில் உள்ளது என்பதை ஆவணப்படுத்தும் லீ டூடாக் என்பவர் இந்த விவாதத்தை எழுப்பி பல்வேறு மக்களின் கருத்துக்களையும் வெளிக்கொணர்ந்துள்ளார்.
அவருடைய வீடியோவில், மேற்கத்தேய மக்களின் உணவு சலிப்பாக இருந்தாலும், அது ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மதியம் முழுவதும் வேலை செய்ய உங்களுக்கு தேவையான ஆற்றலை இந்த உணவுகள் வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளையர்களின் உணவின் முக்கிய அம்சம் என்வென்றால், இது உங்கள் வேலையை குறைக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.