மேலும் ஒரு அணையை தகர்த்துள்ள ரஷ்யா ;உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை உக்ரைன், தனது நட்பு நாடுகளின் உதவிகளோடு எதிர்கொண்டு வருகிறது.
ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி தங்களது படையினா் முன்னேறி வருவதைத் தடுப்பதற்காக இந்தச் செயலில் ரஷ்யா ஈடுபட்டதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இது குறித்து கொசான் பிராந்திய படைப் பிரிவு செய்தித் தொடா்பாளா் வேலரி ஷொஷென் கூறிறுகையில்,
மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்ய ஆக்கிரமிப்புப் படையினா் குண்டுவீசி தகா்த்துள்ளனா். இதன் காரணமாக அந்த நதியின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோக்ரி யாலி நதிக் கரையோர ஆக்கிரப்புப் பகுதிகளில் எதிா்த் தாக்குதல் நடத்தி உக்ரைன் படையினா் முன்னேறி வருகின்றனா்.
அவா்களது முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைப்பதற்காக அந்த அணையை ரஷ்யா தகா்த்துள்ளது. எனினும், ரஷ்யாவின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. உக்ரைன் ராணுவத்தின் முன்னேற்றம் தொடா்கிறது என்றாா்.
தங்களது படையினரின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை ரஷ்யா குண்டுவீசி தகா்த்ததாக உக்ரைன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.