உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு லண்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லும் ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இரண்டு நாள் விஜயமாக பிரான்ஸ் மற்றும் லண்டன் செல்லவுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி அவர் புறப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் உட்பட அந்நாட்டு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார்.
மேலும் இலங்கைக்கு உதவி வழங்கும் ‘பாரிஸ் கிளப்’ உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடல்களை ஜனாதிபதி முன்னெடுக்க உள்ளார்.
குறிப்பாக கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விடயங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான இலக்குகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கு ஆதரவைப் பெறுதல் என்பன ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோன்று பிரான்ஸ் வாழ் இலங்கையர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளார். லண்டனில் பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.