தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் அத்துமீறி நுழைவு!
6 மணி நேரத்தில் 30க்கும் மேற்பட்ட சீன போர் விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் நுழைந்தன.
இதனை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
தைவானை தனது பகுதி என உரிமை கொண்டாடும் சீனா, தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் தைவானை கைப்பற்றுவோம் என எச்சரித்துள்ளது.
சமீப காலமாக, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தில் வான்வழி ஊடுருவலை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மொத்தம் 37 சீன ராணுவ விமானங்கள் தைவானின் தென்மேற்குப் பகுதிக்குள் நுழைந்து, நீண்ட தூர உளவுப் பயிற்சிக்காக மேற்கு பசிபிக் பகுதியை நோக்கிச் சென்றதாக தைவான் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தைவான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தைவானின் பாதுகாப்பு வலயத்தில் சீனாவின் அதிகரித்த ஆய்வுகள் தீவை அழுத்தத்தின் கீழ் வைத்திருக்கும் அதன் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாகும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியவை தென் சீனக் கடலில் முதல் கூட்டுக் கடலோரக் காவல் பயிற்சியை முடித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்த ஊடுருவல்கள் வந்துள்ளன.