உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5500 டொலராக பதிவு!
வரலாற்றில் முதல் முறையாக, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,500 அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.
அதன்படி, இன்று (29) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,579 அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்று (28) காலை ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,164 அமெரிக்க டொலர்களாகக் பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக, உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் தங்கத்தில் முதலீடு செய்து இருப்புக்களை குவித்து வருவதாக வெளிநாட்டு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதற்குக் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





