செர்பியாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஊழலுக்கு எதிராக போராட்டம்
வலதுசாரி தேசியவாத ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக்கின்(Aleksandar Vucic) ஆட்சிக் கால ஊழலுக்கு எதிராக செர்பிய(Serbia) நகரமான நோவி சாட்டில்(Novi Sad) ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டுள்ளனர்.
திருடர்கள் என்று கோஷமிட்ட மாணவ போராட்டக்காரர்கள், அரசாங்கத்தில் ஊழல் நிறைந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், செர்பியாவில் ஊழலை ஒழித்து சட்டத்தின் ஆட்சியை மீட்டெடுப்பது எப்படி என்பது குறித்து ஒரு திட்டத்தை வகுத்துள்ளதாக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்த எதிர்ப்பு பேரணி ஜனவரி 27ம் திகதி செர்பிய தலைநகர் பெல்கிரேடில்(Belgrade) திட்டமிடப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செர்பியாவின் வடக்கு நகரில் 2024ம் ஆண்டு ரயில் நிலைய பேரழிவில் 16 பேர் கொல்லப்பட்டு, நாடு ஊழலின் அடையாளமாக மாறியதிலிருந்து மாணவர்கள் தலைமையிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





