பிரித்தானியாவில் அடிமைத்தனம் ஒழிப்பிற்கு முக்கிய பங்கு வகித்த கடிதங்கள் டிஜிட்டல் மயமாக்கம்
18 ஆம் நூற்றாண்டில் பிறந்த எழுத்தாளர் மற்றும் சமூக சேவையாளரா ஹன்னா மோர் எழுதிய கடிதங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு, அடிமை ஒழிப்பு பிரச்சார வரலாற்றில் “புதிர்களின் மிகப்பெரிய பகுதியை” நிரப்புகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
1745 இல் பிரிஸ்டலில் (Bristol) பிறந்த நாவலாசிரியர் மற்றும் சமூகப் பணியாளர் ஹன்னா மோர் (Hannah More), எழுதிய கடிதங்கள் தொழிலாளர் வர்க்க மக்களுக்கு கல்வி வழங்கும் பாடசாலைகளை தொடங்குவதற்கும் சமூக மாற்றங்களை ஊக்குவிப்பதற்கும் பெரிதும் உதவியதாக கூறப்படுகிறது.
பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பென் வில்கின்சன்-டர்ன்புல் (Ben Wilkinson-Turnbull) இந்த கடிதங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றி, ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அணுகக் கூடியவையாக மாற்றியுள்ளார்.
இந்தக் கடிதங்கள் “ஒரு சாதாரண கல்வித் திட்டத்தைவிட சமூக வளமாகும்” மற்றும் “அடிமைத்தனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பகுதியாகும் நுண்ணறிவை வழங்குகிறது என நெயில்சியா வரலாற்றாசிரியர் டாக்டர் ஜோ எட்வர்ட்ஸ் (Dr Jo Edwards) கூறுகிறார்.
மோர் எழுதிய கவிதைகள் வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் (William Wilberforce) உடன் இணைந்து பிரிட்டனிலும் பிரிட்டிஷ் பேரரசிலும் அடிமைத்தனத்தை ஒழிப்பதில் உதவியதாக கூறப்படுகிறது.
அவரது எழுத்துகள், அரச குடும்பத்தினரையும் கவிஞர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜையும் (Samuel Taylor Coleridge) ஈர்த்துள்ளது.
மோர் நிறுவிய பாடசாலைகள், குறிப்பாக 1792 இல் டைத் பார்னில் (Tythbarn) தொடங்கியது, அடிமைத்தனத்தை “தார்மீக ரீதியாக தவறு” என்றும் “பிரிட்டிஷ் அல்லாதது” என்றும் கிறிஸ்தவ போதனைகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தின.
இன்றும் அவை சமூக மையங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன.
1766–1833 காலப்பகுதியில் ஹன்னா மோரின் 1,800 க்கும் மேற்பட்ட கடிதங்கள் உள்ளதாக கின்சன்-டர்ன்புல் தெரிவித்துள்ளார்.





