‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட கொத்மலை பகுதிகளை மீளமைக்கும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்
‘டித்வா’ புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சீரமைக்கும் பாரிய சிரமதானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களாக நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்டிருந்த 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சுமார் 2,000-ற்கும் மேற்பட்ட தொண்டர்கள், நாளை வரை இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்துத் துயரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





