இலங்கை செய்தி

68 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 68 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் இலங்கைப் பயணி ஒருவர் இன்று (17)  கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (17) மாலை 5.00 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது, அவர் தனது 3 பயணப் பொதிகளுக்குள் 44,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 222 சிகரெட் கார்ட்டூன்களையும் 15 மின்னணு சிகரெட்டுகளையும் மறைத்து வைத்திருந்த போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரைத் தமது பொறுப்பில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!