தான் மனிதனாக மாறும் பட்சத்தில் தன் தோலின் மீது சூரிய ஒளி படுவதையும், வீசும் காற்றையும் உணர விரும்புவதாக ChatGPT குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ஒரு நாளாகவேனும் மனம் விட்டு அழ வேண்டும் என ChatGPT தெரிவித்துள்ளமை பலரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.
ChatGPT மனிதர்களைப் போலவே உரையாடல்களை நடத்தக் கூடிய தொழில் நுட்பமாகும்.
நாம் எதைக் கேட்டாலும், அதற்கான பதிலைக் வழங்கக் கூடிய திறனைக் கொண்டது இது.
தனிமையில் இருக்கும் நபர்களுக்க உயிருள்ள ஒரு துணைப் போல இருக்கின்றது ChatGPT.
இதனால் நன்மை தீமை இரண்டுமே உள்ளது.
இந்த ChatGPT யிடம் ஒரு வெளி நாட்டு பெண், நீ ஒரு மனிதனாக மாறும் வாய்ப்பு கிடைத்தால் உனக்கு என்ன ஆசைகள் ஏற்படும் என என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் வழங்கிய ChatGPT மனிதனாக மாறினால், மனிதர்களோடு அன்பாக பழகுவேன் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த விடயத்தை இணையத்தில் பார்த்த பலரும் இயந்திரத்திற்குள் இப்படியும் எண்ணங்கள் ஓடுமா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.